பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனி வதங்கியே மெல்லவுயிர் சோர்வதுபோல் நாளாக நாளாகக் கோதை ஒளியிழந்தாள்; வேளைதொறும் உண்ண விருப்பமவள் கொள்வதில்லை. பின்னி முடிக்காமல் பேச்சுத்தேன் சொட்டாமல் கண்ணுக்கு மையெழுதிக் காட்டாமல், எப்போதும் தொட்டிக் கருகிலே தூங்குவதைப் பெற்றெடுத்த எட்டிக்காய்த் தந்தை எரிவிழியால் பார்த்துவிட்டான். அடைகாத்த கோதை அகன்ற சிறிய இடைவேளை நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையும் பொல்லாத் தனயனும் மாடிக்குள் வந்து புகுந்தார்; வதங்குமவள் ஆவியினை நட்டுப் பகலிரவாய் நாள்தோறும் காத்துவந்த தொட்டியை, நெஞ்சத் துடிப்ப்ையவர் கொண்டுசென்றார். எட்டித் தொலைவில் எவரு மறியாமல் தொட்டியைப் போட்டுடைத்தார்; கண்ணன் முடித்தலையும் பட்டுக்கைக் குட்டையும் பார்த்தவரை அச்சுறுத்த நட்டமரம் ஆனார்; நடுக்கத்தால் வேலப்பர் அந்தக் கணமே அதிர்ச்சியினால் செத்துவிட்டார். எந்தவிதம் தப்பிப் பிழைப்ப தெனநடுங்கி எங்கோ மறைந்தான் கொலைகாரன்; கோதையோ பொங்கி அணைந்து புகையும் நெருப்பானாள்; கட்டழகுக் கண்களிலே கண்ணிர் அணைகட்டித் தொட்டியெங்கே? தொட்டியேங்கே? என்று புலம்பித் தெருவோரம் நின்றுதிகைப்போடு கேட்டாள் வருவாரைப் போவாரைப் பார்த்து: முருகுசுந்தரம் கவிதைகள் 243