பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளிகள் பொன் பூத் திருக்கும் பூம்புதர் தோறும் மீட்டி வறுமையைக் காட்டி ஏழை வண்டுகள் இரந்துகொண் டிருந்தன. இலையுதிர் காலக் கல்லறை மீது வசந்தப் புற்கள் மறுபிறப் பெடுத்தன. நழுவிய ஆடைக்கு நாணிய காடுகள் இளந்தளிர் ஆடையை எடுத்து விரித்து மூடாத மேனியை மூட முனைந்தன. - தென்றல் மூட்டிய கிசுகிசுப் பாலே குமரி மரங்கள் குலுங்கிச் சிரித்தன. புதிய வருவாய்ப் பூம்புனற் காவிரி பழகிய இலக்கணப் பாதையில் ஒடிப் பழைய பாட்டையே பாடிக்கொண் டிருந்தது. மரங்களில் வாழும் மரபுக் குயில்கள் புதுக்கவி மாலை புனைந்துகொண் டிருந்தன. மாதவிக் கொடியை மறுமணம் புரிந்த போதவிழ் புன்னை மரத்தி னடியில் இருந்தவோர் அழகிய எழுத்தாணிக் கவிஞன் கருத்தில் குவிந்த கற்பனைச் சரக்கை எழுத்துவா கனத்தில் ஏற்றிக்கொண் டிருந்தான். பிசைந்த சுவைத்தேன் வரிகளைப் பின்னர் இசைநயம் பொருந்த உரக்கப் பாடினான். பொழுது மறைந்ததடி! போடுகின்ற நீர்விதைபோல் விழுகின்ற பனித்துளி புல்லினமேல் விழுந்ததடி! முருகுசுந்தரம் கவிதைகள் 245