பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவையெனும் நானுறு குமரிப் பாடல் குழறிவைத்துப் பீற்றுகின்ற குட்டிக் கம்பன் நாவொழுக ஒருநூறு பக்திப் பாடல் நதித்தமிழில் கொடுக்கட்டும்; பருவ நெஞ்சை நீவுகின்ற போதைச்சொல் தன்க முத்தை நீட்டுவது கூடாது; பாடி விட்டால் தாவுகின்ற பொன்மானைத் தருவேன்' என்று தார்வேந்தன் தமிழ்வேந்த னிடத்தில் சொன்னான். மான்குட்டி துள்ளுதற்கும், சிங்கக் குட்டி மதகரியின் மத்தகத்தைப் பிளப்பதற்கும் மீன்எட்டிக் குதிப்பதற்கும் பிறழு தற்கும் மெல்லுதடு சுவைத்திட்டால் இனிப்ப தற்கும் கான்மயிலி பசுந்தோகை விரிப்பதற்கும் கட்டளைகள் பெற்றாற்போல் கம்பன் பிள்ளை பாநூறு பாடுவதற் காணை பெற்றான்; பாடல்களின் அணிவகுப்பை நடத்தி வைத்தான். ‘மெய்யுருக்கும் வாசகமோ! மூவர் பாட்டோ! மிதக்குமிசை மேகவண்ணக் கண்ணன் நெஞ்சைக் கொய்வதற்குக் கசிந்துருகி ஆழ்வா ரெல்லாம் கொட்டியகண் ணிரருவிப் பாட்டோ!' என்றே ஐயுற்றார் புலவரெலாம்; அங்க மெல்லாம் ஆனந்தக் கண்ணானார்; இதற்கு முன்னம் எய்தாத இன்பநிலை எய்தி நின்றார்; இகத்தினிலே பரங்கண்டோம்! கண்டோம்! என்றார். கவிஞர் முருகுசுந்தரம். 252