பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எட்டுக்காற் பூச்சியைப்போல், நடுவில் நீலம் இழைத்திருக்கம் பொற்பூவைத் தலையில் சூடித் தொட்டுப்பார் தொட்டுப்பார் என்று கண்ணால் துணைவர்களை விறலியர்கள் அழைக்கின் றார்கள். கொட்டைப்பாக் களவுள்ள வைரக்க கற்கள் குயிற்றிவைத்த கணையாழி புலவர்க் கெல்லாம் தட்டின்றிக் கிடைப்பதனால் தடவிக் கொண்டே தம்பாட்டை அவரெல்லாம் மறக்கின் றார்கள். 'குலுங்குகின்ற விளம்பரப்பூக் காட்டி, காயே கொடுக்காத பாதிரிபோல் பலபேர் உள்ளார்; விளம்பரப்பூ இல்லாமல் பழங்கொடுக்கும் வேர்ப்பலா வள்ளலிந்தப் பேகன், மேகம் முழங்குவதைக் கண்டாடும் மயிலைக் கண்டு முகம் வருந்தி நடுங்குவதாய் எண்ணிப் போர்வை வழங்கியதைக் கண்ணாரக் கண்டேன்' என்று வாயார அவன்புகழைப் பரணர் சொன்னார். பெரும்பூதன் எழுந்திருந்தான் அவையில்; சங்கப் பெரும்புலவர் நடுவிலவன் பூத வாதி; இரும்புள்ளந் தனைப்பெற்றோன்; பெரியார் போல ஏன்? என்று கேட்கின்ற கேள்விச் சிங்கம். பெரும்பேச்சுப் புலவரெல்லாம் இவன் இடுக்கிப் பிடிக்குள்ளே தவிப்பார்கள்; இன்று சும்மா இருக்காமல் ஏனெழுந்தான் பூதன்? என்றே எல்லாரும் விழித்தார்கள். பூதன் கேட்டான்: கவிஞர் முருகுகந்தரம் 256