பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க, ஏக்கக் கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க, வில்லின் கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க, செங்கை குலைக்காந்தள் போல்நடுங்க, உருட்டி விட்ட தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி; அந்தத் தென்பொதினிப் பொன்மயிலை மூடு தற்குப் போர்வைகொண்டு போகட்டும் பேகன்' என்று பூதனங்கு முழக்கமிட்டான்; பரணர் போனார். அனார்கலி-சலீமின் காதல்கதை கவிஞர் முருகுசுந்தரம் 258