பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கற்கண்டுக் கூடைக்குள் இருந்தும், வீணாய்க் கட்டிகளைக் கணக்கெண்ணும் மூட ரானோம்; சிற்பரதி சிந்தித்துப் பேசுகின்ற சிதாரெங்கே? சீக்கிரத்தில் அதைத்தா! உன்றன் விற்புருவ அலைநெளிந்து நெற்றி நீரில் விளையாடத் தொடங்கட்டும்; பம்ப ரக்காற் சொற்சதங்கை பேசட்டும்; ஐந்த லைக்கை சுற்றிவந்து படநாகம் போலா டட்டும். கோப்பையெடு: மதுநிரப்ப வேண்டாம்; உன்றன் குலாப்ஜாமூன் முத்தத்தை நிரப்பி நீட்டு. பூப்படர்ந்த பின்னலரா மீன்கு திக்கப் புரியாத இசைக்கனவில் மிதக்கும உன்கால் கூப்பாடு போடட்டும்; அக்பர் மண்ணைக் கொஞ்சம் நான் மறக்கின்றேன்' என்று சொன்னான்; நாப்பிசையும் இசையழகி, பொற்சதங்கை, நடுக்கத்தால், அவன் நெஞ்சை நடுங்க வைத்தாள்; புதைவொடுக்கம் கண்டு தம்மை மறந்தி ருக்கும் போதினிலே ஒரிரண்டு கண் வெளிச்சம் கதவிடுக்கில் காதலர்கள் கண்டார்; ஒடிக் கதுவுகின்ற தாழ்ப்பாளை நீக்கிப் பார்த்தார்; பதைபதைத்துப் பெண்ணெருத்தி திறந்த கூட்டுப் பறவையைப்போல் சிறகடித்துப் பறந்தாள்; இந்தச் சதிகாரி யார்? என்று கேட்டான் மன்னன்; சமையலறைச் சிறுக்கியென்று சொன்னாள் அன்னம். முருகுசுந்தரம் கவிதைகள் 261