பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானகத்து வெண்மயிலே! மேனி யில்பூக் கண்காட்சி நடத்துகின்ற வண்ணப் பெண்ணே! தேனிலவே! வானவில்லின் மகளே மானே! தித்திப்பின் விளைநிலமே இயற்கை உன்பால் வானுயர்ந்த பேரழகை வாரி வைத்தும் வட்டநிலா வைமுகமாய் ஒட்ட வைத்தும் மேனியெங்கும் தேனெடுத்துப் பூசி வைத்தும் மேலான கற்பினையேன் வைக்க வில்லை? நஞ்சிருக்கம் நாகத்தின் அழகும், உன்றன் நளினமலர்ப் பெண்ணழகும் ஒன்றே; உன்னை வஞ்சகத்தின் கலையுருவம் என்பேன்; வைர வாளென்பேன்; வளர்ந்துவரும் உனது குற்றம் பிஞ்சாக இருக்கையிலே உன்றன் ஆவி பிரித்துவிடத் துடிக்கின்றேன்; இல்லா விட்டால் கொஞ்சுமொழித் துண்டிலினை எடுத்து வீசிக் குவலயத்தை யேகெடுக்கத் தயங்க மாட்டாய் பணப்பெட்டி திறந்துவைத்தாற் போன்று தோன்றும் பண்புள்ள விண்மீன்காள் இவள் இழைத்த குணக்கேட்டை உம்மிடத்தில் எடுத்துக் கூறக் கூசுகின்றேன். வெண்ணிலவே! விண்ணில் தோன்றும் மணப்பெண்ணே கற்புநிலை மாறி டாமல் மாணிக்கப் பரிதியினைச் சுற்றும் பெண்ணே! இணைத்திருந்த என்கையை நழுவ விட்டே இன்னொருவன் பின்னிவளும் சென்று விட்டாள். முருகுசந்தரம் கவிதைகள் 27雳