பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடிகள் புடை சூழ வசந்த விழாக் காணும் மன்மதத் தேராக அகலிகையின் அணிவகுப்பு உடனே அந்த அதிசய மலர்மீது ஆயிரம் வண்டுகள் மொய்த்தன. அவள் கண்வண்டுகளோ, ஆவலோடு இந்திரன் பக்கம். 'உலகை யார் முதலில் வலம் வருகின்றாரோ அவருக்கு உரியவள் நான் - தவமிருந்து பெற்ற தங்கப் பதக்கம்' - என்று முக்தல முனிவன் முன்னறிவிப்புச் செய்தான். ஒரு பெண்ணின் காதல் சுதந்தரம் பந்தயப் பொருளாக மாற்றப்பட்டது. வெள்ளை யானை மீதேறி வேகமாகப் பறந்தான் இந்திரன். பசுவை வலம்வந்து பரிசுக்குக் கை நீட்டினான் கெளதவ முனிவன். பதக்கத்தின் விருப்பத்தைக் கேட்டா பரிசளிப்பு நடை பெறுகிறது! கவிஞர் முருகுகந்தரம் 22