பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடல் நகர் பெற்ற பாடல் பேரறிஞர் அண்ணா அவர்கள் மதுரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய தமிழ்ப்பேச்சு இது. இப்பேச்சே ஒரு கவிதை; நான் இதை விருத்தப்பாவில் நிறுத்தியிருக்கிறேன். விழுப்புண்கள் பெற்றநகர்; இலக்கி யத்தில் விழாதபுகழ் பெற்றநகர்; தொன்று தொட்டுச் செழித்துவளர் தமிழ்மரபைக் கட்டிக் காக்கும் சிறப்பான வேலிநகர்; சங்கச் சான்றோர் எழுத்துக்கள் எழுந்துவந்து தமிழ்ச் சிறப்பை ஏற்றுமதி செய்யுநகர்; வெற்றி யாலே கொழுத்தபுகழ்ப் பாண்டியர்கள் கொலுவி ருந்த கூடல்நகர், பாடல்நகர் வெற்றிக் கோட்டம். நடுங்காத பெரும்புலமை நடத்தி வந்த நக்கீரன் என்நினைவில் தோன்றிச் சொக்கன் சுடுங்கண்ணுக் சஞ்சாமல் எதிர்த்து நின்று சொற்சிலம்பம் ஆடுகின்றான்; ஆன்ற விந்தே அடங்கியசொற் பெரும்புலவர் தமிழ்ப்பண் பாட்டுக் கதிகாரம் வகுக்கின்றார்; அவர் தமிழ்த்தேன் குடங்கவிழ்ந்து பெருக்கெடுக்கக் காதி ரண்டும் குளிர்கின்றேன்; காண்பதற்கு முடியவில்லை கலைத்துறையில் படிந்தெழுந்து பட்டந் தாங்கக் காத்திருக்கும் களிறுகளே காப்பி யத்தில் நிலைத்துவிட்ட நெடுஞ்செழியன் பரணர் பாரி நெடுங்கிள்ளி நலங்கிள்ளி பேசி வந்த சுளைத்தமிழில் இவ்வுரையை நிகழ்த்து கின்றேன்; சொல்லாலே தொடுகின்றேன்; இந்நூற் றாண்டில் முளைத்துவரும் குருத்தறிஞர் குலமே! உம்மை முத்திருக்கும் மதுரையிலே வரவேற் கின்றேன். கவிஞர் முருகுசுந்தரம் 278