பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைவட்டத் தாவணியை விரித்துத் தோகை அழகுமயில் ஆடுவதும், ஒளிப்ப ழத்தைத் திருவிளக்கு மூக்காலே சுமந்த வண்ணம் தெருமுனையில் நிற்பதுவும், பேறுகாலக் கருமேகம் மருத்துவச்சி துணையில் லாமல் கனத்தமழை ஈனுவதும், பொன்னைப் பூமிப் பெருவயிறு தாங்குவதும் தங்க ளுக்கா? பிறர்நலத்துக் கென்பதை நீர் உணர்தல் வேண்டும். 'நாட்டுக்குப் பொதுவுடைமை நீங்கள்! என்றும் நடுங்காத நெஞ்சுரத்தைப் பெற்றுத், தீயோர் ஆட்டத்துக் குத்தாளம் போடா தீர்கள்; அரசாங்கம் கொடுங்கோலாய் ஆகும் என்று தீட்டுகிறார் நல்லறிஞர் ரஸ்ஸல், இந்தத் திருநாட்டு மாணவர்கள் சிந்தனைக்கும் பூட்டிருக்கக் கூடாது; மடமை அச்சம் புகவிடுதல் கூடாது கல்விக் கூடம், மூவேந்தர் முடியாட்சி, குப்த ராட்சி மொகலாயர் பேராட்சி ஓய்ந்த பின்னர் காவலற்ற கனித்தோட்டம் ஆனோம்; மாற்றார் கைப்பிடிக்குள் குரல்வளையைக் கொடுத்து விட்டோம். ஆவலுடன் மேனாட்டைப் பார்த்து நம்வாய் அங்காந்தோம்; இந்நாட்டில் தொன்று தொட்டு நாமென்ன சாதித்தோம்? என்ற எண்ணம் நமக்கில்லை; நாம்திரும்பிப் பார்க்க வில்லை. முருகுசுந்தரம் கவிதைகள் 29