பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிப்பாதை மலைமீது சகடக் குன்றைக் குனிந்திழுக்கும் எருதைப்போல், உழைத்தா லன்றிக் கிடைக்காத குறிக்கோள்கள் நமது நாட்டுக் கிருப்பதனை நீரறிவீர்; ஆகை யாலே நடப்பதெது? நன்மையெது வென அறிந்து நடக்கின்ற திறம்வேண்டும்; மயங்க வைக்கும் கொடிப்பின்னல் பேச்சுக்குக் குனிய வேண்டாம் குயில்வேறு; கரிக்குருவிக் கூட்டம் வேறு, குனியாத பனியிமயக் குன்றத் துக்கும் குமரிக்கும் ஒட்டுறவு தேவை: வைரக் கணையாழிப் பொருத்தத்துக் காக வேண்டிக் கைவிரலைக் குறைப்போமா? தன்மா னத்தை நினையாமல் வேற்றுமொழி ஆதிக் கத்தை நிச்சயமாய் வரவேற்க மாட்டோம்; மேனி நனைகின்ற பூங்காற்றின் குளிச்சிக் காக நம் உடையை அம்பலத்தில் இழக்க மாட்டோம். பாலாறு கங்கைநதி பொன்னி வைகை பாய்கின்ற இந்நாட்டுப் பொருளா தாரம் மேலேறு தல்நமது குறிக்கோள் ஆகும். மேன்மேலும் பெருஞ்செல்வம் இங்கி ருக்கும் நாலாறு பேரிடத்தில் சென்று சேர்தல் நன்மைதரும் ஏற்பாடா? இல்லை! இந்தக் கோளாறு தீராத வரைக்கும், நாட்டுக் குறிக்கோள்கள் அத்தனையும் கேலிக் கூத்தே! கவிஞர் முருகுசுந்தரம் 282