பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'என்னிடத்தில் உள்ளதெல்லாம் எனக்கே உன்பால் இருக்கின்ற தும்கூட எனக்கே" என்னும் கன்னக்கோல் தத்துவத்தால் ஒருமைப் பாடு கட்டாயம் வாராது, பசித்த ஒநாய் முன்னிருக்கும் வெள்ளாட்டைக் கொன்று தின்று முடித்தபின்னர், அவ்வாடும் நானும் இன்றைக்(கு) ஒன்றுக்குள் ஒன்றானோம்; ஐக்கி யத்தில் ஒன்றிவிட்டோம் என்றுரைத்தால் ஒப்பு வாரா? பாடமொழி பயிற்றுமொழி பரந்த இந்தப் பாரதத்தின் இணைப்புமொழி என்ற சொற்கள் மேடையிலே கேட்கின்றோம்; ஒருமொ ழிக்கு மேலான தகுதி தாய் மொழியென் கின்ற பீடுற்ற பெருந்தகுதி யொன்றே. சங்கப் பெருந்தமிழே ஆட்சிமொழி; உலகில் ஏனை நாடுகளின் நட்புக்கும் அறிவு வேட்டை நடத்துதற்கும் ஆங்கிலமே நமக்குப் போதும். ஆங்கிலத்தால் நாமடிமை ஆனோம்; சே! சே! அதுவேண்டாம் என்றுரைப்போர், இங்கி லாந்தில் வாங்குகின்ற கடனுக்குக் காலம் பார்த்து வாசலிலே நிற்கின்றார்; எங்கள் இந்தித் தேங்குழலைத் தின்னுங்கள் என்று வாயில் திணிக்கின்றார்; தெரியாதா இவர்நினைப்பு? தீங்குதரும் இத்திட்டம் வேண்டாம் என்று திரண்டுவரும் மாணவரைப் போற்றுகின்றேன். முருகுசுந்தரம் கவிதைகள் 283