பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்சிலம் பிரண்டும், உங்கள் கைச்சிலம் பிரண்டும் இன்றைக் (கு) ஆர்த்திடும் தொழில் மறுத்தே அடங்கின; விரிந்து கொட்டும் பாற்குடம் ஆனேன்; தாக்குப் பட்டதேன் கூடும் ஆனேன். +நாற்குலப் பண்ணில் மூன்றாய் நானானேன் உங்க ளுக்கே! காசுக்கு மேடை யாட்டம் கற்றவள், உங்கள் முன்னால் ஆசைக்கு மேடை யாட்டம் ஆடினேன்; பொன்மு முக்கு வேசை நான் என்பீர் காதல் வேந்தரே! உம்மை நெஞ்சில் பூசித்தேன் என்ப தல்லால் பொன்பொருள் கேட்ட துண்டா? நெருங்கிநான் வரும்போ துங்கள் நெஞ்சத்தைப் பங்கு போடும் அரும்புமே கலையை எவ்வா(று) ஆற்றுவேன்; அந்தக் கட்டிக் கரும்பினை ஆலை வாயில் கசக்கிநீர் பிழிய லாமா? நெருங்குமுள் பலாவெ றுத்தீர்; நெடுஞ்சுளை ஏன்வெ றுத்தீர்? +நூல்வகைச் சாதிப்பண்கள்! இணை, கிளை, பகை, நட்பு, மூன்றாம் பண் Lj ēj} & . கவிஞர் முருகுசுந்தரம் - 288