பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிலில் இருக்கும் போதென் கால்களைப் பொறுத்தீர்; யாழைத் தொட்டின்று தவறு செய்த தொடிக்கரம் பொறுத்தால் என்ன? வெட்டுக்கள் இன்றி ஏது விழுப்புண்கள்? பூச லின்றித் தொட்டுச்சு வைக்குங் காதல் சுறுசுறுப் படைவ துண்டா? மணம்மாறு படத்தொ டுத்த மல்லிகை கழுநீர், மற்றும் புனம்நாறும் சண்ப கப்பூ பூட்டிய தாழை யேட்டில் குணம்மாறு பாடில் லாஎன் கொள்கையை விளக்கி யுள்ளேன்; சினம்மாறு படுமா? கண்கள் சிவக்குமா நமக்கு மீண்டும்? o o கற்புச்சிறை அபெலார்டு-ஹெலாய் என்ற பிரெஞ்சுக் காதற் பறவைகளின் வாழ்க்கை ஒரு கண்ணிர் வரலாறு. டாக்டர் பீட்டர் அபெலார்டு தருக்கநூற் பேராசிரியன்; துறவு நிலை ஏற்றுக் கொண்ட பாதிரி. ஹெலாய் செல்வக் குடும்பத்தில் பிறந்தபத்தொன்பது வயதுக் கொத்துமலர்; அபெலார்டின் மாணவி. இவள் கல்வி தன் ஆசிரியனோடு புள்ளியில்லாக் கல்வியில் முடிகிறது. மதவாதிகளின் எதிர்ப்பும், பிரபுக்கள் எதிர்ப்பும் இவர்கள் காதலைச் சிதறடித்தன. வேட்டை நாய்களைப் போல் தன்னைப் பின் தொடர்ந்த எதிரிகளுக்கஞ்சி மடங்களில் ஒளிந்து திரிந்தான் அபெலார்டு. ஹெலாயும் இறுதியாக துறவு நிலை மேற் கொண்டு கன்னி மாடத்தில் கற்புச் சிறை புகுந்தாள். அவள் அபெலார்டுக்கு எழுதிய காதற் கடிதம் கவிதை வடிவம் பெறுகிறது. கவிஞர் முருகுசுந்தரம் 290