பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதம் இந்நாள் ஏதிவ் வகிலத்தில்? விரிந்து போன கற்களா கூடும்? நம்மைக் காதலா இனிமேல் கூட்டும்? நிற்கிறேன் உமது வான்வில் நீண்டமுக் காட்டுக் காட்டில்! கற்பினை வற்பு றுத்தும் கண்ணியில் வீழ்ந்து விட்டேன்! படுக்கையின் அருகே உங்கள் படமுண்டு... பார்வை யாலே கடித்தென்னை விழுங்கும் ஊமைக் காதலன்!... அப்ப டத்தைக் கடைக்கண்ணால் பார்த்து நெஞ்சைக் காளவாய் ஆக்கு கின்றேன்; அடிக்கடி ஊடிக் கூடி அரைக்காதல் நடத்து கின்றேன். எழுத்துவாய்க் கடித மொன்றே எதிரிகள் குறுக்கி டாத மொழித்திரை, காத லர்க்கு முக்காட்டுத் துது; வார்த்தை வழித்துணை; கனவுக் காதல் வரிப்படம்; பேசும் அந்த எழுத்துவா கனத்தால் அன்றி என்னுயிர்ப் பயணம் இல்லை. முருகுசுந்தரம் கவிதைகள் 293