பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதத்தை எழுதும் போது கைகளுக் கின்பம்; பின்னர் உடையினில் அதைம றைத்தல், உம்மிடம் சேர்க்க வேண்டி இடையினில் ஆள்பி டித்தல், ஏவுதல், கடிதம் உம்மை அடைந்ததா என்று நைதல் அனைத்துமே துன்ப இன்பம்! மூளையில் அறிவை நட்டு முளைக்கின்ற தத்து வத்தைக் காளையே! நீங்கள் உங்கள் கடிதத்தில் எழுத வேண்டாம். ஏழைநான் விழைவ துங்கள் இதயத்துப் பேச்சை நீவீர் நாளையே அனுப்பி வைப்பீர்; நல்லநாள் பார்க்க வேண்டாம். வெள்ளைத்தாள் காதல் தூதை விரும்பிநீர் அனுப்பி வைத்தால் அல்லிப்பூ உதட்டு முத்தம் ஆயிரம் அதற்க ளிப்பேன். உள்ளத்தில் பொறாமை யேதும் உண்டானால், அதனை யந்த வெள்ளைத்தாள் மீது காட்டும்; வேறெவர் மீதும் வேண்டாம். கவிஞர் முருகுசுந்தரம் 294