பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலைத் தவிர வேறு கருத்துக்கும் உணர்ச்சி கட்கும் ஆதர வாக நெஞ்சில் அரங்கேற்றம் செய்ய மாட்டேன். பூதலத் தரசி தாங்கும் பொன்முடி, நீங்கள் சூட்டும் காதலிப் பட்டத் துக்குக் கால்தூசு போன்ற தாகும். மதுக்குட மங்கை யென்னை மயக்குதற் காக நீங்கள் புதுப்புதுக் கவிதை யாரம் பூட்டினர் அறைக்குள் ளேநாம் பதுக்கிய காதல் இந்தப் பாரீசில் அலரா யிற்று. விதைப்பழம் என்னை யாக்க விரும்பினர்; வேற்றுார் சென்றோம். நமக்காகக் கவிதைக் காதல் நடத்தினர். அதைப் படித்துத் தமக்காக என நினைத்துத் தம்முடை நெகிழ்ந்தார் பெண்கள். சிமிழ்க்கின்ற கண்ணில் உம்மைச் சிறைசெய்தார்; பொறாமை யாலே "சுமைச்சுவைக் கவிதை இந்தச் சுள்ளியின் மேலா?’ என்றார். கவிஞர் முருகுசுந்தரம் 296