பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை மணந்த இந்தக் கன்னியர் நடுவில் உங்கள் தடந்தோளை மணந்த தையல்! தாங்கிய சிலுவைக் கூட்டம் இடம்பெறும் இடத்தில் காதல் ஏக்கத்தைத் தாங்கும் கோதை! மடமெங்கும் கடவுட் சின்னம்! மனத்திலென் காதற் சின்னம்! இருவரில் ஒருவ ராக இருந்த அந் நாளில், பாரில் பிரிவென்ப திருப்பதாகப் பேதைநான் எண்ணவில்லை. ஒருமுறை கூட மேனி ஒதுங்கநீர் விட்ட தில்லை. எரிந்தபின், னாலும் அன்பே என்சாம்பல் காத்தி ருக்கும். புதுப்பிக்க முடியா அந்தப் பொல்லாத இன்பத் துக்குப் பதைப்புறு கின்றேன்; பாம்புப் படுக்கையில் கிடக்கு மிந்தக் கதுப்புத்தேங் கனியின் வாழ்க்கை கத்திமேல் தானா? நெஞ்சக் கொதிப்பாறி அமைதி காணக் குளிர்புனல் ஒடை யுண்டா? கவிஞர் முருகுசுந்தரம் 298