பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயது ஏற ஏற அபெலார்டு-ஹெலாய் காதல், தத்துவக் காதலாக மலர்ந்தது; உள்ளம் ஓய்ந்து, அவர்கள் காதலில் மூளை ஆதிக்கம் பெற்றது. அவர்கள் கூட்டு முயற்சியால் கிறித்தவக் கன்னிமாடப் பெண்களுக்குரிய ஒழுக்க விதிகள் உருப்பெற்றன. தன்னுடைய அறுபத்து மூன்றாம் வயதில், (21, ஏப்ரல், 1142) எந்தத் துணையுமின்றி, அன்பு காட்டுவோர் அருகில் யாருமில்லாமல்.பீட்டர் அபெலார்டு உயிர் நீத்தான். அவன் உடல் ஹெலாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹெலாய் இறந்தாள். அபெலார்டின் கல்லறைக் கருகில் அவளும் புதைக்கப்பட்டாள். மாற்றான் தோட்டத்து மல்லிகை 'இந்த நூற்றாண்டு இரு பெரும் வீரரைத் தோற்றுவித்தது. அவர்களுள் ஒருவன் நெப்போலியன்; மற்றொருவன் ஜியார்ஜ் கார்டன் லார்டு பைரன் என்று பைரன் இறந்த போது ஐரோப்பியத் தாளிகைகள் கண்ணிர் வடித்தன. கால் ஊனம் பெற்ற இக் காதற் கவிஞனின் அழகு எந்தப் பெண்ணாலும் எதிர்க்க முடியாத ஆற்றலைப் பெற்றது. இவன் கவிதை எழுதுவான்; ஒய்ந்த நேரத்தில் காதலிப்பான், இவன் காதலியர் பலர். இவன் கடைசிக் காதலி இத்தாலி நாட்டு முத்தார அழகி தெரிசா, பணம்படைத்த மாலைப்பிரபுவைமணந்த காலைச் செங்கதிர்; அவளுக்குப் பைரன் எழுதிய காதற் கடிதம் இது. முருகுசுந்தரம் கவிதைகள் 299