பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னிப்பூ மலர்கின்ற காடான ஐரோப்பாக் கண்டத் துக்குள் என்னழகுத் தேரேறி இறங்காத இடமில்லை! துள்ளி ஒடும் மின்னலையும் வெற்றிகண்டேன்; மேலேறி வானவில்லை மணந்தேன்; ஆனால் உன்னழகின் உயரத்தை ஒருத்தியிடம் இதுவரையில் கண்ட தில்லை. நூலேணிக் காதலுக்கு நோக்கத்தால் வரவேற்புத் தந்த பெண்ணே! போலோனில் உன்பொருட்டுப் போடட்டு மாகாதற் புதுக்கூ டாரம்? காலார நடந்தோர் நாள் கால்வாயின் கரையோரம் காதல் நட்டு மாலானோம்; இனியென்றும் மாறாத காதலுக்குள் மாட்டிக் கொண்டோம். கவிஞர் முருகுசுந்தரம் 302