பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில் லென்று குளிர்ந்த நீர் முகத்தில் விழக் கண் திறந்து பார்க்கிறாள் அகல்யா. அவள் முகத்தின் அருகில் கெளதமன் முகம். ஆம். இன்று அவளுக்கு முதலிரவு! உடம்பு வலியும் அசதியும் தாலாட்டக் காலை நேரக் கங்கை வெள்ளத்தில் நீண்ட நேரம் கண்மூடிக் கிடந்தாள் அகலிகை. கொள்ளிக் கட்டையைக் கீழே இழுத்ததும் கொதிநிலை குறைவதுபோல் கொஞ்சங் கொஞ்சமாக அவளும் அமைதி நிலைக்கு வந்தாள். கதிரவன் கிழக்கில் கண்விழித்ததும் பனிமூட்டத் தோடு இவள் மனமூட்டமும் விலகியது. ரிஷிபத்தினியின் கடமைகள் குலுக்கிப் போட்ட சோழிகளாய் மல்லாந்து விழுந்து இவளெதிரில் சிரித்தன. முருகுசுந்தரம் கவிதைகள் 25