பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறியவரை வறியவராய் வைத்தி ருக்க வகைசெய்யும் ஏற்பாடே தான தர்மம்' 'வறியவர்க்குக் கொடுப்பதனால் பணக்கா ரர்க்கு வானுலகம் வரவேற்பு நல்கும்; இங்குப் பொறுமையுடன் இருக்கின்ற ஏழை, வானப் பொன்னுலகில் புத்தின்பம் பெறுவான் என்று குருமார்கள் கூறுகின்றார்; பயணச் சீட்டும் கொடுக்கின்றார்; கொழுக்கின்றார் கொள்ளை யாலே. சமயம் ஒர் அபின்; அறிவை மயங்க வைத்துச் சாய்க்கின்ற மதுப்பள்ளம்; அதனுள் மக்கள் தமதுரிமை அத்தனையும் தள்ளி விட்டுத் தாங்களும்வீழ் கின்றார்கள்; ஆனால் இன்று நமதருமைத் தோழர்களோ விழித்துக் கொண்டார். நரைத்தாடிக் குருமார்க்குச் சொர்க்கத் தோடு சமயத்தை விட்டுவிட்டார்; இங்கி ருக்கும் சமதரும உலகத்தைத் தாமே கொண்டார். எந்தஒரு சமயத்தைத் தழுவு தற்கும், எம்மதமும் சம்மதமே என்ப தற்கும் சொந்தமதம் எனக்கெதுவும் இல்லை யென்று சொல்லுகின்ற நாத்திகனாய் வாழ்வ தற்கும், இந்தமண்ணில் எல்லார்க்கும் உரிமை வேண்டும். எழுச்சிமிக்க பாட்டாளி மக்கள் கட்சி, சொந்தச்சிந் தனைக்கார நாத்தி கர்கள் சூழ்ந்திருக்கும் பாசறையாய் விளங்க வேண்டும். கவிஞர் முருகுசுந்தரம் 306