பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலுவையினை நம்பாத பேர்க ளுக்குச் சிரச்சேதம் தந்தார்கள்; இறைவன் வந்து கொலுவிருக்கும் கோவிலிலே நல்ல வர்க்குக் கொலைத்தீர்ப்புக் கொடுத்தார்கள்; பெண்ணி னத்தைப் பலியாடு போல்நெருப்பில் எறிந்து நெஞ்சம் பதைபதைக்கக் கொன்றார்கள்; இந்தக் கோயில் எலியாரின் நடத்தைகளைக் கண்காணிக்க இனியிங்குக் காவலரை அமர்த்த வேண்டும். உரிமைக்குக் கொடியெடுத்துப் போர் நடத்தும் உழைப்பாளித் தோழர்களே இறந்த பின்பு மறுஉலகில் ஒன்றுபடும் எண்ணம் வேண்டாம். மண்ணுலகில் விண்ணுலகை வரவ ழைக்கப் பொறுமையுடன் போரிடுவீர் கோயிற் கூட்டம் புதுத்தடைகள் நம்வழியில் வைத்தால், சற்றும் இரக்கமற்ற போர்தொடுப்போம்; மக்கள் ஆற்றல் எந்நாளும் இவ்வுலகில் தோற்ப தில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 3O8