பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கிடும் வெள்ளம் iங்கப் புதுப்புனல் பாய்ச்சு கின்ற கங்கையை நினைக்குந் தோறுங் களிமகிழ் வெய்து கின்றேன். திங்களும் வானு மாகத் தித்திப்புங் கொய்யா வாகக் கங்கையும் நானும் நீங்காக் காதலா லிணைந்து விட்டோம். மாங்குயில் கூவும் நாளில் மழைசரந் தொடுக்கும் நாளில் பூங்கர மசைத்து வேனில் பூப்பந்தல் போடும் நாளில் தாங்கரும் மகிழ்ச்சி வெள்ளம் தாவிடக் கங்கை யோரம் தேங்கிய அழகை யுண்டு திரிந்துநான் மகிழ்ந்த துண்டு. இந்திய நாட்டு மக்கள் இதயத்தில் பாயு மாறு: சிந்தனை வீரம், நம்மோர் சேர்த்தநற் கலைகள் வாசச் சந்தனம் நாக ரீகம் சார்ந்த நம்பிக்கை யாவும் உந்தியே பாயு மிந்த உயர்மலைக் கங்கை யாறு. முருகுசுந்தரம் கவிதைகள் 31 +