பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவரிகள் தன்மானத் தத்துவத் தேர் சிலையாக நிற்கின்ற அண்ணா வுக்கும் சினவேங்கை பெரியார்க்கும் உவமை சொன்னால் அலையண்ணா உலைபெரியார் இந்நூற் றாண்டை அடைத்தபுகழ் கொண்டவர்கள் இரண்டு பேரும்! தலைநரைத்த பெரியாரோ இந்த நாட்டின் தன்மானத் தத்துவத்தேர்; கிரேக்க வீரன் அலெக்சாந்தர் போர்க்களத்தில் தோற்ற தில்லை; அவனைப்போல் பெரியாரும் தோற்ற தில்லை, , களைக்கொட்டைப் போல்தலைவர் இந்த நாட்டில் கணக்கெடுத்தால் ஆயிரம்பேர் ; சமுதா யத்தைத் தலைகீழாய்ப் புரட்டிவைத்த ராம சாமி தன்மானப் புல்டோசர், இவர்க்கு முன்னால் மலைபோன்ற மதமடமை சாதிக் குன்றம் மண்ணாக நாம்கண்டோம்; பணத்துக் காக விலைபோக விரும்பாத தலைவர்; தேர்தல் விட்டில்கள் விரும்பிவந்த விளக்குக் கம்பம், இறங்கிவரும் பேராறு பிறருக் காக எதிர்த்திசையில் செல்வதில்லை; இந்தச் சிங்கம் மறந்துந்தன் கொள்கைகளைப் பிறருக் காக மாற்றியது கிடையாது; வல்வில் ஒரி குறிதவறி அடித்ததில்லை; பெரியார் பேச்சுக் கூரம்பு தாக்காத தலைவர் இல்லை. பொறிபறக்கும் இவர்பேச்சு நெருப்பில், சிக்கிப் பொசுங்காத புராணங்கள் எவையும் இல்லை. முருகுசுந்தரம் கவிதைகள் 3:13