பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை அரும்புகள் பசி ஏழைகளின் பிரதிநிதி; வயிற்றுக் காய்ச்சல்; இல்லாரை வருத்துகின்ற குடற்புண், செல்வர் வாழையிலைக் கொள்கைக்கு வைரி; ஏங்கும் வறியவரின் திருவோட்டுத் தோழன்; தங்கப் பேழையினால் அரசியலைப் பேரம் பேசும் பெருஞ்செல்வர்க் கெதிரான வாக்குச் சீட்டு; ஆழியெனும் கடல்சூழ்ந்த உலகில், நானே அடிவயிற்றின் அவமானம்; நாட்டின் ஈனம். ஆண்டவனுக் கறைகூவல்: ஆதாம் ஏவாள் அணையாமல் ஏற்றிவைத்த நெருப்பு வேள்வி. தீண்டிவருத் தும்.வறுமைக் குற்றத் துக்குத் தீர்ப்பளித்த அடிவயிற்று நரகம்; பட்டுப் பூண்டபெரும் புளியேப்பக் காரர் சொர்க்கம்; புசிப்பறியா வெறுநிலத்தில் முளைத்த கூர்முள். நீண்டிருக்கும் தசைச்சுரங்கச் சதுப்பு மண்ணில் நின்றெரியும் எரியாவி; கொள்ளி வாய்ப்பேய். பொதுவுடமைத் தத்துவத்தின் புத்தன்; மார்க்சின் போதிமரம்; ஞானகுரு; ஆட்சி வேட்டை அதிகார மந்திரச்சொல்; திட்டத் துக்குள் அடங்காமல் வளர்கின்ற உடலா தாரம். நிதிதேடும் எழுத்தாளர் வீட்டில் என்றும் நிலைத்திருக்கும் மூலதனம்; அவ்வை கூடப் பதிலறிய முடியாத வயிற்றுக் கேள்வி; பாருலகின் பொதுவான ஒருமைப் பாடு. கவிஞர் முருகுசுந்தரம் 3.18