பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதித்தா மரைகள்; கொஞ்சும் அஞ்சுகங்கள். மிதித்துக் கிளம்பும் மேடைப்புல் லரிப்புகள். நடிப்பு நாயகங்கள்; நடக்கும் சிந்தனைகள். அடித்துப் பறக்கும் ஆடற் சிறகுகள். நாட்டிய அரங்கில் நம்பியர் உயிர்களைப் போட்டுக் குலுக்கும் புதுக்கிலு கிலுப்பைகள். இசைதவ றாத இருநடுக் கங்கள்; வசைபல பெற்று வாள்வாய் நோக்கிப் புகார்ச்செவ் வேளைப் போக்கிய அடிகளே! மருத்துவ மனைக்குச் சென்று மதிமுகச் செவிலிப் பெண்டிர் கருத்துடன் தொண்டு செய்யும் காட்சியை ஒர்நாள் கண்டேன். அரிவையர் அவர்கள் அல்லர்; அழகிய அன்னக் கூட்டம்! பரிவுடன் படுக்கை தோறும் பழகிடும் பால் நிலாக்கள்! படுக்கையை விரிப்பர்; கொல்லிப் பலாச்சுளை வாய் திறந்தே அடிக்கொரு தரம் சிரிப்பர்; அழகிய மயில்போல் ஆடித் துடிப்புடன் நடப்பர்; மான்போல் துள்ளுவர்; உள்ளத் தன்பை வடித்தெடுத்து எதிரில் வைப்பர்; வட்டிலைச் சுமந்து செல்வர். கவிஞர் முருகுசுந்தரம் 32O