பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் பாவேந்தர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் குயில் ஏட்டில் வெளியிட்ட போது, அவர் வழங்கிய பாராட்டுக் கவிதை. நான்செய்தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான் செய் தளிக்கும் தகுதியிலே - வான் போன்றான் வாழ்கவே நன்முருகு சுந்தரந்தான் வண்மை யெல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து உவமைக் கவிஞர் சுரதா குயில் -8-62 சேலத்துக் கவிஞர் முருகு சுந்தரம் பாலத்துச் சோதிடம் பார்க்க மறுப்பவர் ஈரோட்டை முதலிலும் காஞ்சியைப் பிறகும் தேரோட்டத் தோடு திருவிழா நடத்தும் திருவா ரூரையும் திரும்பிப் பார்ப்பவர் பாவேந்தர் பாடலை நெஞ்சில் பதிப்பவர் இரும்பு தூங்கும் சேலத்தில் பிறந்தும் கரும்பு துங்கம் கவிதைகள் வடிப்பவர் பூம்புகார் கலைக் கூடத் திறப்பு விழா-18-4-1973. கலைஞர் கருணாநிதி காற்றின் பெருக்கல் புயலாகும் நாற்றின் பெருக்கல் பயிராகும் சாற்றின் பெருக்கல் சுவையாகும் ஆற்றின் பெருக்கல் புனலாகும் பாட்டின் பெருக்கல் என்னாகும்? பொன்னாகும்! பூவாகும்! புதிய மணமாகும் சேர்வராயன் மலைக்கணியும் சேலத்து மாங்கனியும் செந்தமிழர் பெற்று மகிழ்ந்தாலும்-என் செம்மாதுளைக் கவிக்கிணையோ? கவிஞர் முருகுசுந்தரம் 322