பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் தமிழண்ணல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: தங்கள் கவிதையில் பழகுதமிழும் அழகு நடையும், ஆற்றொழுக்கான ஓசையும் அமைந்துள்ளமை கண்டு பாராட்டுகிறேன். "கிளியுடம்புத் தாமரை இலை’ நல்ல நிற உவமை. 'காலடியால், காதலரை, வேவு பார்க்கும் காமன் நல்ல தொரு கற்பனை. - அரைவட்டத், தாவணியை விரித்துத்தோகை அழகுமயில், ஆடும்போது மயிலாட்டம் கண்ணெதிரே காட்சியளிக்கிறது. தமிழைப்பற்றிய அரிய கருதது; திங்கள் வாழ் மண்டி லத்தில் தென்னாப் பிரிக்க நாட்டில் துங்குவாழ் மலேயா சாவா தொலைவு மோரீசில், மற்றும் எங்கு வாழ் கின்ற போதும் இத்தமிழ்க் குலத்தைச் சேர்க்கும் சங்கிலி தமிழே என்று சாற்றுவாய் அன்புத் தோழி டாக்டர் எழில் முதல்வன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி: கடைதிறப்பு ஒருவகையில் உணர்ச்சியின் மடைதிறப்பாக இருக்கிறது. முற்றிலும் புதிய நோக்கில் அமைந்த அக்கவிதைகளைப் படித்துப் படித்து மகிழ்ந்தேன், சொல்லாட்சிச் சிறப்பு, உவமை நலம், கூறும் முறை அனைத்தும் புதுமையே. அண்மைக் காலத்தில் வெளிவந்துலாவும் கவிதை நூல்களில் நான் படித்தவரை, கடைதிறப்பு தனியிடத்தைப் பெறுகிறது. கவிஞர் முருகுசுந்தரம் 324