பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தமிழ்நாடன் சேலத்துமா இனிக்கும் - எனக்கு முருகுவின் பா இனிக்கும் என்றார் கலைஞர். தருமபுரி பிரிந்ததோடு சேலத்து மாம்பழப் பெருமை போயிற்று. முருகுவின் கவிதையோ என்றும் இனிக்கும் மாத்தமிழ். எழுதும் பேனா கம்ப்யூட்டர் ஆனது போலானது தமிழ்க்கவிதை. இன்றைய தமிழ்க் கவிதைச் சூழலில் நம் முருகுவின் இடம் எங்கே? பாருங்கள் அங்கே நிலவில் முருகுவின் கால் சூரியனில் அவரது கை -தாமரை ஜூன் 2002. டாக்டர் க.ரத்தனம் அகலிகை பற்றிய என் திறனாய்வு நூலின் கட்டுரை ஒன்றில் 'வருங்காலத்தில் அகலிகை வாழ்வைக் கருவாகக் கொண்டு மேலும் பலர் இலக்கியம் படைப்பர்' என்று என் நம்பிக்கையை வெளியிட்டிருந்தேன். அந்த என் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் முதல் முகிழ்ப்பாக வெள்ளையானை அமைந்து விட்டதில் ஒரு மகிழ்ச்சி. இந்திரன் கெளதமன் உருவில் வந்து அவளைத் தொட்டஅளவிலே அது தன் கணவனில்லை, தன் கனவுத் காதலன் என்பதைப் புரிந்து கொண்டாள் என்றாலும், உடல் வேட்கைக்கு அடிமையாகித் தன்னை மறந்தவளாக அவனோடு இன்புற்றாள்; சாபத்தால் கல்லானாள். மீண்டும் உயிர் பெற்ற போதும் அவள் நாட்டமும் வேட்கையும் அந்தக் காதலனிடமே அவளைப் பிணைத்துவிட்டிருந்தது என்பதே கவிஞர் உணர்த்தும் செய்தி. கவிஞர் முருகுசுந்தரம் தமது இக்கவிதையில் அறிமுக முன்னுரையில் 'டாக்டர் ஃப்ராய்டின் ஆழ்மனத்தத்துவம் (Psychoanalysis) உலகக் கலை, இலக்கியங்களை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பின் விளைவாக எழுந்தது தான் மீமெய்ம்மை இலக்கியம் (Surrealistic Literature); அகலிகையின் ஆழ்மனக் கூறுபாடுகளும் அவற்றின் விளைவுகளுமே இக்காப்பியத்தின் கரு' முருகுசுந்தரம் கவிதைகள் 325