பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனமிழந்து தவிப்பது போல், அவளுக்குத் தன்னையிழந்த தவிப்பு. 口口 ஒருநாள் - காடடில சமித்துகள் பொறுக்கிக் கொண்டிருக்கும்போது வானத்தில் சிறகு முளைத்த வெள்ளை யானையொன்று பறந்து வரக் கண்டாள். கவையாகப் பிரிந்த நவமணிப் பூணிழைத்த நான்கு கொம்புகள், ஒவ்வோர் அசைவிலும் கம்பீரமான ஆண்மையின் மதர்ப்பு. அவளையும் அறியாமல் அகலிகை ஒரு பிடியாக மாறிக் கொண்டிருந்தாள். கவுள்களில் நாணம் வழியக் குனிந்த தலையோடு குடை ராட்டின மாகத் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வெள்ளை யானை அவளைச்சுற்றிப் பறந்து வந்தது. கவந்தன் கால்களாக நெடிதுயர்ந்த மரச்சந்தில் அவ Tெ - மாட்டிக் கொள்ள கவிஞர் முருகுசுந்தரம் 28