பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றிலிருந்து சுகம் கலந்த ஒரு யானைப் பயம் அவளைத் துரத்திக் கொண்டிருந்தது. அவளுக்குள்ளேயே அடிக்கடி யானைப் பிளிறல். காட்டுக்குள் யானைக் காலடியில் சுள்ளிகள் முறியும் சத்தம். வானத்தில் வெள்ளி மேகங்கள் வெள்ளை யானைகளாக ஊர்வலம். இரவில், கெளதமன் நெருங்கும் போதெல்லாம் தும்பிக்கைப் பயம். ஒருநாள் - - மாலை மயங்கும் நேரம். இணை சேர்ந்த இரண்டு தும்பிகள் கை கோத்தபடி ’பாலே நடனமாடுவதுபோல் எதிரில் பறக்க, அந்த வேடிக்கையைக் கண் கொட்டாமல் கண்டு களித்த அகலிகை, உள்ளத்தில் பிள்ளைப்பூச்சி ஊர உடம்பைக் குப்புறக் கிடத்திப் படுத்துறங்குவதாகப் கவிஞர் முருகுசுந்தரம் 30