பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவனை செய்தாள். இமைகள் மூடிய பூரண விழிப்பு உள்ளத்தையும் உடலையும் சுட்டெரிக்கும் யானைத் தீ. யாரோ மேலே விழுந்து தட்டியெழுப்புவது போல் வெளியில் கொண்டைச் சேவலின் கூவல். கெளதமன் எழுந்து காலைக் கடன் முடிக்கக் கங்கைக் கரைக்குப் புறப்பட்டான். ஆனால்... சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். வேதனை விழிப்பில் புரண்டு கொண்டிருந்த அகலிகை வியப்போடு பார்த்தாள். 'அகல்யா! கரையுடைக்கும் வெள்ளம் கால நேரம் பார்ப்பதில்லை!" என்று சொல்லி அவளைத் தொட்டான். கணவன் கைபட்டால் கட்டையாகக் கிடக்கும் அவளுடம்பு இன்று - நாணை வளைத்துவிட்ட வில்லாக அதிர்ந்து நிமிர்ந்தது. முறுக்கேற்றப்பட்ட வீணை நரம்புகள் மீது முருகுசந்தரம் கவிதைகள் -- 31