பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த விலாங்கு வாழ்க்கை எனக்கு வேண்டாம். உங்கள் கையில் இதுநாள் வரை நான் கல்தானே? இப்போதும் நான் கல்லாக அனுக்கிரகம் செய்யுங்கள்' என்று வேண்டினாள். அகலிகை கல்லானாள். 5. உத்தர காண்டம் “மரத்துப்போன என்னுள் மீண்டும் உணர்ச்சிக் கீற்றுகள். என் தலைமீதிருப்பது யாருடைய பாதம்? என் கல்நித்திரை ஏன் கலைகிறது? திருவடிகளாலே என்னை ஆசீர்வதிக்கும் இத்தேவமகன் யார்? என் சாபத்தைக் கரைக்கும் இந்த வரதன் யார்? இந்த அமுதன் தீண்டியதும் மீண்டும் என் இதயம் துடிக்கிறது! முருகுசுந்தரம் கவிதைகள்