பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்திரன் - என்றாள் அகலிகை ‘தேவர்கள் சாட்சியாக முனிவர்கள் சாட்சியாக நீ கைப்பிடித்த கெளதமன்? - பதற்றத்தோடு கேட்டார் விசுவாமித்திரர். 'கைப்பிடித்தது கெளதமர். நான் வெறும் தர்ப்பை! இரவில் அவர் ஒதுங்கி மூட்டும் ஒமகுண்டத்தில் ஒடித்துப் போடப்படும் சமித்து! உண்மையில் கற்புக் கெட்டவர் கெளதமரும், முன்னின்று எனக்குத் திருமணத்தை முடித்து வைத்த முனி சிரேஷ்டர்களுந்தான். ஒரு பெண் யாரை விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் வற்புறுத்தித் திருமணம் செய்வது ஒரு விதத்தில் கற்பழிப்புத் தானே? பாரதப் பெண்கள் பறிப்பதற்கு முன் வாய்திறக்கும் மலர்கள். பறித்தபின் பிணத்திற்குச் சூட்டினாலும் மெளனித்து மரிப்பவர்கள். தங்கள் பாத துளியைப் பற்றிப் கவிஞர் முருகுசுந்தரம்