பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உணர்ச்சியின் தும்மல்! []口 இந்த மாங்குயில் மிகவும் நாணமுள்ள பறவை. பிறரைக் கண்டால் இலை மறைவில் பதுங்கிக் கொள்ளும். உன்னை மறைத்துக்கொள். தானாக வெளிப்பட்டு ஒயாமல் கூவும். 口口 இந்த நளின நங்கையைப் பலாத்காரம் செய்ய நினைக்காதே! கருத்தால் - அவளைத் தீண்டிப்பார். ஒர் இன்ப அதிர்ச்சி ஒரு புன்னகை கண்களில் மயக்கம் தெரிகிறதா? அவள் கனிந்து சதங்கை குலுங்க உன் நெஞ்சத்தில் அடியெடுத்து வைப்பாள். அதன் பிறகு அவள் ஆட்சிதான் கவிஞர் முருகுசுந்தரம் 42