பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைப் போர் நடத்தி வெற்றியுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். அரச குடும்பத்து அருச்சுனர்களுக்டு மட்டுமே தேரோட்டிப் பழக்கப்பட்ட கண்ண பிரான்களே! பாசுபதாஸ்திரம் காண்டீபர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? எங்களாலும் அதைப் பெறமுடியும். நீங்கள் - நெற்றிக் கண்ணைக் காட்டாதீர்கள்! எங்களை... உங்களால்... எரிக்க முடியாது! காணி நிலம் வேண்டாம் பராசக்தி எனக்கு - அதிக ஆசையில்லை ! இருப்பது போதும். காணி நிலம் வேண்டாம். உழவே தெரியாத எனக்குக் காணி நிலம் எதற்கு? பத்துப் பதினைந்து தென்னைக்கு உரம் வைத்துப் பாதுகாக்க என்னால் ஆகாது. கவிஞர் முருகுசுந்தரம் 48