பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜய நகர சாம்ராஜ்யக் காவலர்கள். விரும்பிய பெண்ணை ராணி வாசப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டுப் போய் அரண்மனைக்குள் அடக்க மாகக் கற்பழித்தனர். ஆனால் இந்நாட்டின் இன்றைய காவல்துறை காவல்நிலையத்தையே கற்பழிப்புக் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. புவனேசுவரில் இரண்டு பெண்கள் பட்டப் பகலில் பாதை நெரிசலில் துரத்தித் துரத்திக் கற்பழிக்கப் பட்டனர். கர்மயோகி விவேகானந்தர் பிறந்த கல்கத்தாக் காவல் நிலையத்திலும் கசங்கிய மலர்கள். நல்லவேளை நியாயம் கேட்கக் கண்ணகி காவல் நிலையத்துக்கு வரவில்லை. காவல் வேட்டை நாய்கள் பத்மினியைக் கடித்துக் குதறியபோது எந்தக் கண்ணபிரானும் சேலை கொண்டு வரவில்லை பத்மினியின் கணவனும் பஞ்ச பாண்டவரைப் போல் பார்த்துக் கொண்டிருக்கவில்லை; கவிஞர் முருகுசுந்தரம்