பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரை போராடினான். கணவனையும் கற்பையும் ஒருங்கே இழந்த பத்மினி கதறி அழுதபோது காவல் துறையின் இரும்புக் கரங்கள் அவள் குரல்வளையை நெறித்தன. அதையும் மீறி அவள் குரல் அரங்கத்தில் எதிரொலித்து வழக்கு மன்றத்தின் வாயிலைத் தட்டிய போது, அன்றைய தமிழக அரசு கள்ளப் பிள்ளைக் காரியாய்க் கலைக்கவும் முடியாமல் உயிர்க்கவும் முடியாமல் தவித்தது. ஓரிலக்கம் ரூபாய் கருணைத் தொகையும் ஒரு வேலையும் கொடுத்துப் பத்மினியோடு சமரசம் செய்து கொள்ள முன்வந்தது. கருணைத் தொகையா அது? கால்விரித்த காவல்துறை அசிங்கத்தை மூடிமறைக்கத் தமிழக அரசு விரித்த பட்டுத் துணி! 'சட்டம் ஒர் இருட்டறை ! வக்கீலின் வாதம் ஒரு கைவிளக்கு !’ என்றார் அண்ணா. ஏழைகளுக்குக் கிடைக்காத முருகுசுந்தரம் கவிதைகள் 57