பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியூட்டும் உன் 'ஹெராயின் முத்தத்தை... எல்லாவற்றையுந்தான்... புதிய பொம்மையை அதிசயமாகப் பார்க்கும் குழந்தையைப் போல் என்னைப் பார். இலையுதிர்த்த மரங்களையும் தளிர்க்க வைக்கும் உன் - வசந்த விரல்களால் என்னைத் தடவிக் கொடு. வெறிநாய் துரத்தினால் ஓடிவரும் வேகத்தோடும் பதைப்போடும் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் என் மீது பாய்ந்து என்னை இறுக்கிக் கொள் கையடக்க மணிபர்சைக் கச்சிதமாக உன் ரவிக்கைக்குள் பத்திரப்படுத்திக் கொள்வாயே அதைப்போல் என்னையும்...! மெதுவாகச் சுழன்றடிக்கும் தென்றல் காற்று மல்லிகைப் புதரில் நுழைந்து என்னவெல்லாம் செய்யுமோ அன்ன வெல்லாம் உன்னிடம் செய்ய எனக்கு அனுமதி கொடு. ஏனென்றால்... என் நெற்றியைப் பாழ்நிலம் என்று பரிகசித்தனர். முருகுசுந்தரம் கவிதைகள் 59