பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதில் திருநீறோ திருமண்ணோ இல்லை. என் மார்பு கூட அமங்கலமாகக் காட்சியளிக்கிறதாம்; என் உயர்ந்த சாதியை விளம்பரப்படுத்தும் பூணுரல் அதில் இல்லை. நான் - கோவிலுக்கோ, மசூதிக்கோ மாதா கோவிலுக்கோ சென்றதில்லை. அதற்காக நான் வெட்கப்பட்டதும் இல்லை. கீதை பைபிள். குரான் - இவற்றைத் தீண்டியது கூட இல்லை. இவை தீண்டத்தகாதவை என்றும் நான் கருதியதில்லை. காற்றும் நீரும் சோறும் - சில நேரங்களில் உடலுறவும் என் அன்றாடத் தேவைகள். நான் - விருந்துநாட்களில் குடிக்கிறேன். ஆனால் - நான் எந்த முஸ்லீமையும் வெட்டிச் சாய்த்ததில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 6O.