பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் குடிமக்கள் எல்லாரும் வான வீதியில் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கோ இரவு எப்போது வரும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து இருட்டுக்குள் முத்தமிடுகின்றனர். சீவிவிட்ட தென்னம்பாளையில் வடியும் பதநீர்போன்ற முலைப்பாலை முன்றானையால் மூடிக்கொண்டு தாய்மார்கள் குழந்தைகட்கு ஊட்டுகின்றனர். ஏன் தெரியுமா? இதற்கும் அரசாங்கம் எங்கே வரி விதித்து விடுமோ? என்ற அச்சம் தான். ஒர் இரங்கற்பா கனடா நாட்டின் கண்ணிர்க் காப்பியமே! உன் வரிகளை உலக மக்களின் இதயத்திலன்றோ எழுதி விட்டுச் சென்று விட்டாய்! வரலாற்றுப் புகழ்பெற்ற கிரேக்க மராத்தான் ஒட்டம் உன் முன்னால் தத்துக் கிளிப் பாய்ச்சல் ஆகி விட்டது, கவிஞர் முருகுசுந்தரம் 64