பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பும் எச்சிலும் தூர விலகிச் செல்லும் தொழு நோயர்க்குத் தொண்டு செய்து, தானும் தொழு நோயனாக மாறிய டேமியன் பாதிரியின் தொண்டு உனது தொண்டின் முன்னால் கேலிச் சித்திர மாகிவிட்டது. எங்கள் நாட்டில் தீந்தமிழுக்காகச் சிலபேர் தீக்குளிப்பதுண்டு. அத் தீக்குளிப்புக்கூட உன் தியாக வேள்வியின் முன்னால் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி விழா ஆகிவிட்டது. நீ பழுத்த இலையா உதிர்வதற்கு? பார்வை வழுக்கி விழும் பட்டுத்தளிர். லாரன்ஸ் நதிக்கரையின் குளிர்மரக் காட்டில்முத்தமிட்ட இடமெல்லாம் அரும்பு வைக்க, காதல் முனு முணுப்போடு ஆப்பிள் மரத்தைக் கட்டித் தழுவும் மென் காற்றுக்குப் போட்டியாய் சந்தனக் கட்டை கல்லில் தேய்வது போல் தங்கச் சரிகைக் கூந்தல் சாயல் மயில் ஒருத்தி உன் இடுப்பில் தேய முருகுசுந்தரம் கவிதைகள் 65