பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகின் புண்களை யன்றோ முத்தமிட்டாய்! சாவு - சாதாரணனுக்கு ஒப்பாரி. உனக்கு ஒப்பற்ற மாகாவியம். புற்று நோய்ப் போராட்ட நிதியாக நீயோர் துறு கல்லைக் கேட்டாய்! ஆனால் - உலகம் இமயத்தையே உன் முன்னால் எடுத்துப் போட்டது. இருபதாம் நூற்றாண்டில் குறப்பிடத்தக்க நிகழ்ச்சி உலகப்போர் என்று வரலாற்று வல்லுநர் கூறுவர். நான் சொல்லுகிறேன் - 'நீ தான்' என்று, விளக்கக் குறிப்பு கனடா நாட்டின் விளையாட்டு வீரரான டெர்ரி போக்ஸ் புற்று நோயால் 22 வயதில் தமது வலது காலை இழந்தார். புற்று நோய்த் தீவிர ஆராய்ச்சிக்காக20லட்சம் டாலர்நிதி, திரட்டஒரு பெரு நடைத்திட்டத்தில் ஈடுபட்டார். கனடாவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைக்கு, 5,300 மைல் தூரம் செயற்கை வலது காலுடன் நடந்து சென்று நிதி திரட்டுவதுதான் அத்திட்டம். ஆறுமாதத்தில் 3339 மைல் தூரம் தான் நடக்க அவரால் முடிந்தது. அதற்குள் புற்று நோய் அவர் நுரையீரலைப் பாதித்து வழியிலேயே இறந்து விட்டார். ஆனால் அவர் திரட்டிய நிதி 40 லட்சம் டாலருக்குமேல் சேர்ந்துவிட்டது. 1977 இல் மறைந்த அவ்விளைஞரின் வீரச்செயல், மனித குலத்திற்காக ஆற்றிய மாபெரும் சாதனை. முருகுசுந்தரம் கவிதைகள் 69