பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சியைப் பேசிய முதற்காப்பியம்; உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் பெயர் விளங்கும் வண்ணம் கவிதையும் வசனமும் கலந்த உருவாக்கப் புதுமையிலும் முதற்காப்பியம்! இவை மட்டுமல்லாமல் அடியார்க்கு நல்லாரால் 'நாடகக் காப்பியம்' என்று சுட்டப்படும் விதத்தில் அத்துறையிலும் முதற்காப்பியம்; இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுள்ள சிலப்பதிகாரம் நாடகக் கூறுகளைத் தெளிவாகவே உலகத்திற்கு வெளிப்படுத்திய பிறகும் தமிழில் நாடகத்தின் வளர்ச்சி முறையாகவும் இல்லை, முதிர்ச்சியாகவும் இல்லை. நாடகப் பண்புகள், கூறுகள் குறைந்த நூல்களைத்தர்ன் நூற்றாண்டுகள் தோறும் காணமுடிந்தது. தொடர்ந்து, பல நூற்றாண்டுகள் நிகழ்ந்து விட்ட இந்தத் தளர்ச்சிக்கு -இடை வெளிக்கு-உரிய சிறப்புக் காரணங்கள் பல இருக்கலாம். ஏதேனும் பொதுப்படையான காரணம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்றுப் போக்கில் ஊகிக்க முடியும். இ. முருகையன் மொழியில் இப்படிச் சொல்லலாம்: "நெடியதொரு பழமரபை உடையது தமிழ்க் கவிதை. இந்த மரபின் சுமையுடன் நவீனத்துவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது, தமிழ்க் கவிஞர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது ('ஒருசில விதிசெய்வோம் - முன்னுரையில்). அழகழகாய், புதிய புதிய வடிவங்களில் சிற்பங்கள் வேண்டுமென்றால் மரங்களைச் செதுக்கித்தான் ஆக வேண்டும். மரபு என்னும் சுமையைச் சுமந்து கொண்டே இருந்து விட்டதால் பாரதிவரைக்கும் மிகப்பெரிய தேக்கநிலை ஏற்பட்டு விட்டது. ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்ற கதை சொல் புதிது பொருள் புதிது, சுவை புதிது, என்று மரபுச் சுமையைப் பாரதி மாற்றிக் காட்டிய பிறகும் கூட, வேதாளம் முருங்கை மரம், ஏறிய கதையாக மரபு சுமையாகிறது. இதனால் பாரதிக்குப்பிறகு கூடத் தேக்க நிலை கணிசமாகவே நிகழ்ந்தது. 3 தமிழ் நாட்டில் விவாதித்து முடிவுக்கு அல்லது ஒரு தெளிவுக்கு வரவேண்டிய இலக்கிய விஷயங்கள், அரங்குகளில் ஒரளவுக்குக் கூட இன்று விவாதிக்கப்படுவதில்லை, மாறாக, பணமா-பாசமா? மனைவியா மாமியாரா? போன்ற விவகாரங்கள் மன்றங்களில் மக்களின் முன்னேஅலசப்படுகின்றன. செய்தக்க செய்யாமையானும் கெடும் என்ற வள்ளுவன் குறளுக்கு இன்றையத் தமிழ் நாட்டு அரங்குகளின் விவாதங்களே சான்றாகின்றன. செய்யுள்-கவிதை-வசன கவிதை-புதுக்கவிதை ஆகிய இவை இன்னும் தெளிவாக முருகுசுந்தரம் கவிதைகள் 71