பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சர்வதேசியம் என்னும் பெயரால் தேசியம் ஊனப்படுவதையோ தேசியம் என்னும் பெயரால் சர்வதேசியம் சிதைவுபடுவதையோ மானுடநேயப் படைப்பாளி ஒரு போதும் ஏற்கமாட்டான். சர்வதேசியமும்-தேசியமும் இணைந்து, பாரடா உன் மானிடப்பரப்பை, என்று ஒன்றுபட்டுப் பார்க்கும் காலம் கனிந்து வராதா என்று ஏங்கிக் கிடக்கும் படைப்பாளி குருதிப்புனல் கொப்பளித்து ஒடுவதை-அதுவும் பெரும்பான்மை மக்களின் குருதியாய் அது இருந்து விடுவதை ஒரு போதும் ஏற்கமாட்டான். ஒரு மக்களாட்சி தேசத்தின் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் கொல்லப்படுவது எந்த அளவுக்குக் கொடுரமானதோ, அந்த அளவுக்கு மேல் கொடுரமானது-மன்னிக்க முடியாதது, அப்பாவிமக்களைக் கொன்று குவிப்பது. இந்தக் குருதிப் புனலில் கவிஞன் மக்களின் பக்கம் தான் நிற்கவேண்டும்! அப்படி நின்றுதான் இந்த நாடகத்தை ஆரம்பிக்கின்றார் கவிஞர். எந்த நியாயமான முகாந்திரமும் இல்லைபஞ்சாபி இளம்பெண்அம்ரிதாதுன்பப்படுவதற்கு! அடுத்தது. ஈழப் பிரச்சனை. இதுதான் நாடகத்தின் முக்கியமான மையக்கரு. அதனோடு தொடர்புடைய பாத்திரமாக இடம் பெறுகிறாள் 'வீணா. தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும்.துணிச்சல் மிக்கபாத்திரம் எதிர்பாராத நிகழ்ச்சிகள் மிகுந்த களம் அல்ல அவள் நிற்கும் இடம்! அடுத்து என்ன, எப்படி நடக்கப் போகிறது என்று, தானே தீர்மானித்துக் கொண்டு தானாகவே எரிந்து விழுகின்ற எரிநட்சத்திரப் பாத்திரம் வீணா ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை' என்று சலிப்படைந்துபோனாவள் வீணா. 'நீதி நூல் - தம்மைக் கோழைப்படுத்தும் மெதுவான நஞ்சு! அறத்தைப் பேசிப் பேசியே கெட்டுப் போனவர்கள் தமிழர்கள்' என்று பேசிக்கொண்டு வீணா அறிமுகம் ஆகிறாள். இனியும் அவள் எந்த நீதியையும் அறத்தையும் நம்புவதற்குத் தயாராக இல்லை என்பதற்கான தன்விளக்க உரை அது அவள் மட்டுமா? அவளது இனம், குடும்பங்கள், குழந்தைகள் அனைவரும் இனி எந்த நீதியை, எந்த அறத்தை நம்புவது? நீதி இருக்கலாம், அறத்தின் ஆறுகள் இருக்கலாம். அவைகளை நம்புவதற்கு யார்தான் இனி மிஞ்சப்போகிறார்கள் என்ற படுபயங்கரமான சூழ்நிலையில் வீணா, இலங்கையில் இருந்து தமிழகம் வருகிறாள்! பல்கலைக் கழகத்தில் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு! 'எரிநட்சத்திரமாய் எரியப் போகிறேன். சிலரை எரிக்கப் போகிறேன்" என்று திட்டமிட்டுத்தான் வீணா வருகிறாள் எரிநட்சத்திரமாய் எரிந்து விழப்போகிற அவளுக்குக் காதலாவது கனிவாவது! அவையெல்லாம் முருகுசுந்தரம் கவிதைகள் 77