பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்கிரையாக்குவோம். (நொடிக்குள் காவல் அதிகாரியின் சீருடை அணிந்து கதவைத் திறக்கிறான் நெடுமுடி) நெடுமுடி: யாரது வெளியே? என்ன கூட்டம், (குண்டர்கள் திகைப்பு) குண்டர்கள்: கள்வன் ஒருவன் இப்பக்கமாக... நெடுமுடி: காவல் அதிகாரியின் வீட்டிலே கள்வனை நீங்கள் தேடுகின்றீர்கள்! குண்டர்கள்: மன்னிக்க வேண்டும், ஐயா! வருகிறோம். (குண்டர்கள் கலைந்து செல்கின்றனர். செய்வதறியாது திகைத்த நெடுமுடி சற்று நேரம் அமைதியாகச் சிந்திக்கிறான். பின்னர் கதவை மெதுவாக தட்டி...) நெடுமுடி: குண்டர்கள் சென்றனர். கோதையே வெளியில் வா! (வளையிலிருந்து எட்டிப்பார்க்கும் எலிக்குஞ்சுபோல அவள் கதவைத் திறந்து எட்டிப்பார்க்கிறாள். நடுக்கம் அவளை இன்னும் விடவில்லை) அச்சம் வேண்டாம்; அமைதிகொள்; உட்கார். (அடுப்பின் மீதிருந்த தேநீரை ஊற்றிக் கொடுக்கிறான்; அவனை மருண்டு பார்த்த வண்ணம் அவள் தேநீர் அருந்துகிறாள்) நீருக்குத் தப்பி, நெருப்பில் கவிஞர் முருகுசுந்தரம் 84