பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரோடு கொளுத்தப்பட்டான். :;وا درBQ Gر (6 நீ எவ்வாறு தப்பினாய்? பெண்: கிரந்த சாகிபின் அருள்... அரும்பிலேயே நான் கருக விரும்பவில்லை. முன்னுரையிலேயே என் மூச்சுக் காப்பியத்தை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. நான் வாழ வேண்டும்! நான் வாழ வேண்டும்! (குலுங்கி அழுகிறாள்) நெடுமுடி: நீ வாழத்தான் போகிறாய் நிச்சயமாக நீ வாழத்தான் போகிறாய்! பெண்.: எப்படி? நெருப்பு வட்டத்தின் நடுவில் சிக்கிய மெழுகுப் பாவை நான். இந்த நாட்டின் பாதைகள எலலாம திறந்த திமிங்கிலத்தின் வாய்கள்! என் தலைக்கு மேல் தொங்கிய கூர்வாள் அறுந்து வேகமாக விழுந்து கொண்டிருக்கிறது. நாளைய விடியலைப்போல் என் சாவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. கவிஞர் முருகுசுந்தரம்