பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 3 இடம் : தில்லி - நெடுமுடி இல்லம் நேரம் : இளங்காலை உறுப்பினர்: நெடுமுடி, அம்ரிதா, சலீம் அம்ரிதா சோகமே உருவாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். நெடுமுடி அவள் எதிரில் அமர்ந்து இதமானசொற்களால் அவள் இதயப் புண்ணை ஆற்ற முற்படுகிறான். நெடுமுடி: இரண்டு நாட்களாக இமைகளை நீ மூடியதாகத் தெரியவில்லை. அம்ரிதா: கண்ணிர் வெள்ளம் கரையை உடைக்கும் போது இமைக் கதவம் திறந்து தானே இருக்கும்! நெடுமுடி: கரைபுரண்டு ஒடும் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரையேறுவது தான் வெற்றி. வாழ்க்கை வசந்த மென்றால் அதை - மலர் தூவி வரவேற்க வேண்டும் வாழ்க்கை போராட்டமென்றால் அதை-வாளோடுதான் எதிர் கொள்ளவேண்டும், அழுகை வாழ்க்கைப் படகில் ஏற்படும் கசிவு அதை அடைக்காவிட்டால் படகே மூழ்கிவிடலாம் முருகுசுந்தரம் கவிதைகள் 91