பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ரிதா: கொந்தளிக்கும் கடலில் என் சிறிய படகு எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கும் என்பது தெரிய வில்லை நெடுமுடி: முயன்று போராடிப்பார் அடுத்து நீ செய்ய விரும்புவது என்ன? அம்ரிதா: திசையே தெரியாத போது என் ஒட்டைப் படகை எந்தக் கரை நோக்கிச் செலுத்த முடியும்? நெடுமுடி: உள்ளம் சோர்ந்து விடாதே, உறவினரைத் தேடிப் போ, புது வாழ்வு கிடைக்கும், மேகம் - அதிக நேரம் நிலவை மறைத்துவைக்க முடியாது. இனியும் உன்னை மறைத்துப் பாதுகாப்பது கடினம், நகருக்குள் - பதற்றம் ஒரளவு தணிந்திருக்கிறது. இனி நீ ஜலந்தர் புறப்படலாம். சலீம்! சலீம்: (சலீம் உள்ளே ஓடி வருகிறான். அவன் கையில் பயணச் சீட்டும் பர்தாவும் இருக்கின்றன.) கவிஞர் முருகுசுந்தரம் 92